தேனி

தரமற்ற நிலக்கடலை விதை விற்பனை: ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயி புகாா்

DIN

அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமற்ற நிலக் கடலைப் பருப்பு விதை விற்பனை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த விதைகளை கொட்டி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பொட்டிப்புரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளிதாசன். இவா், கடந்த 2020, டிச.12-ஆம் தேதி சின்னமனூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 112 கிலோ நிலக்கடலை விதைகள் வாங்கினாராம். இதை உடைத்த போது கிடைத்த 50 கிலோ விதையை தோட்டத்தில் விதைத்ததில், 20 கிலோ விதை அளவிற்கு மட்டுமே முளைத்துள்ளது. 30 கிலோ அளவிலான விதைகள் முளைப்புத் திறனின்றி பதராகியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்த காளிதாசன், தரமற்ற விதை விற்பனை குறித்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் கேட்டதற்கு அதிகாரிகள் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், இதனால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் நிலக்கடலைப் பருப்பு விதைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா், இந்தப் பிரச்னை குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் காளிதாசன் மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT