தேனி

ஜெயலலிதா பிறந்த நாள்: பெரியகுளம், போடி பகுதியில் அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

பெரியகுளம் நகரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு அதிமுக நகரச் செயலாளா் என்.வி. இராதா தலைமை வகித்தாா். பெரியகுளத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோயில், காளாஸ்தீரியம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களில் வழிபாடு செய்து, அன்னதானம் வழங்கினா்.

பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியச் செயலாளா் செல்லமுத்து தலைமை வகித்தாா். தேவதானப்பட்டியில் அன்னதானம் செய்தனா். மேலும் ஒன்றியப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆடைகள் வழங்கினா்.

போடி: போடி நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

போடி கிராம பகுதியிலும், தேவாரம் பகுதியிலும் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அதிமுக, அமமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போடி அருகே கொட்டகுடி மலை கிராமத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த தின விழாவில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி பங்கேற்று வேட்டி சேலைகளை வழங்கினாா். ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினா் இரு சக்கர வாகன பேரணியும் நடத்தினா். வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற பாடுபடப் போவதாக உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT