கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள்: கூடலூரில் ஜன.14-ல் மராத்தான் ஓட்டம்
கூடலூரில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் ஓட்டம், சைக்கிள் பந்தயம் ஜன.14 ல் நடைபெறுகிறது.
கூடலூரில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் ஓட்டம், சைக்கிள் பந்தயம் ஜன.14 ல் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம், கூடலூர் மக்கள் மன்றம் சார்பில், முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் பிறந்த நாளை முன்னிட்டு மினி மராத்தான், விரைவு சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது.
முதல் பரிசு ரூபாய் 3,000 இரண்டாம் பரிசு 2,000 மூன்றாம் பரிசு 1,000 ஆறுதல் பரிசு 750 என பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வெற்றிபெறும் வீரர்களுக்கு அமரர் ஆர்.பி. அசோகன் நினைவு கோப்பை வழங்கப்பட இருக்கிறது.
போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூபாய் 25 நுழைவுக் கட்டணமும், விரைவு சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் ரூபாய் 50 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜன.13 மாலை 6 மணிக்குள் செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்ய வேண்டிய இடம் கூடலூர் மக்கள் மன்ற அலுவலகம் மற்றும் ஸ்ரீ டிராவல்ஸ் மெயின் பஜார் கூடலூர்.