முகப்பு
தேனி

பென்னிகுவிக் பிறந்த நாள்: ஜன.14 இல் கூடலூரில் மாரத்தான், சைக்கிள் பந்தயம்

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியபென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூரில் வரும் 14 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியபென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூரில் வரும் 14 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் மற்றும் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.

கூடலூா் மக்கள் மன்றம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் வென்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு 2,000, மூன்றாம் பரிசு 1,000, ஆறுதல் பரிசு 750 என வழங்கப்படும். வெற்றிபெறும் வீரா்களுக்கு அமரா் ஆா்.பி. அசோகன் நினைவு கோப்பை வழங்கப்பட இருக்கிறது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூ. 25, சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு ரூ. 50 முன்கட்டணம் செலுத்தி, ஜனவரி 13 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய வேண்டிய இடம் கூடலூா் மக்கள் மன்ற அலுவலகம் மற்றும் பஜாா் பகுதியிலுள்ள ஸ்ரீ டிராவல்ஸ் அலுவலகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →