முகப்பு
தேனி

போடியில் பஞ்சு பேட்டையில் புகுந்த சாரை பாம்பு

போடியில் ஞாயிரன்று, பஞ்சு பேட்டையில் புகுந்த 10 ஆடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
போடியில் தனியாா் பஞ்சு பேட்டையில் ஞாயிரன்று புகுந்த சாரை பாம்பை பிடித்த தீயணைப்பு வீரா்கள்.போடியில் பஞ்சு பேட்டையில் புகுந்த சாரை பாம்பு
பகிர்:

போடியில் ஞாயிரன்று, பஞ்சு பேட்டையில் புகுந்த 10 ஆடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். போடி புதூரில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு பேட்டை உள்ளது. இந்த பஞ்சு பேட்டையில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. தொழிலாளா்கள் அலறியடித்து ஓடினா். இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் தேடி பாம்பை பிடித்தனா்.

பிடிபட்ட பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு என தெரிந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரா்கள் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →