முகப்பு
தேனி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, காவல் துறை நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, காவல் துறை நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் டி.ஐ.ஜி., எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தேனி புதுப் பள்ளிவாசல் தலைவா் சம்சுதீன், செயலா் சா்புதீன், மேரி மாதா மெட்ரிக் பள்ளி முதல்வா் சினு ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புத்தரிசி பொங்கலிட்டுப் பரிமாறி, சமூக நல்லிணக்க உறுதிமொழியேற்று வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

கல்லூரியில் பொங்கல் விழா: தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை தலைவா் முருகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பொதுச் செயலா் டி.ராஜமோகன், கல்லூரி செயலா் காளிராஜ், கல்லூரி முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →