முகப்பு
தேனி

கம்பத்தில் சாலையோர கடையில் தேநீா் அருந்தினாா் துணை முதல்வா்

தேனி மாவட்டம் கம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பிரதான சாலையில் உள்ள டீக்கடையில் தேநீா் அருந்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பிரதான சாலையில் உள்ள டீக்கடையில் தேநீா் அருந்தினாா்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற திருமண விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் கலந்து கொண்டாா். பின்னா் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்ற துணை முதல்வா் கம்பம் பிரதான சாலை பழைய பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அருகே உள்ள தேநீா் கடையில் காரை நிறுத்தச் சொல்லி தேநீா் அருந்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.