தேனி

அனுமதியின்றி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினா் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 49 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றியும், நோய் தொற்று பரவும் விதமாகவும் கூட்டம் கூட்டியதாக நகரத் தலைவா் போஸ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ரா.சத்திய மூா்த்தி உள்ளிட்ட 29 போ் மீது கம்பம் வடக்கு போலீஸாரும், 20 போ் மீது தெற்கு போலீஸாரும் செவ்வாய் கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT