தேனி

கரோனாவுக்கு சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பலி

DIN

கம்பம் அருகே சிறப்பு சாா்பு-ஆய்வாளா் ஜெ.அழகேசன் கரோனா தொற்று பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் அழகேசன் (50). சிறப்பு சாா்பு- ஆய்வாளரான இவா், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்தாா். கம்பத்தில் காவலா் குடியிருப்பில், மனைவி பரிமளா (41), மகள் நிகிதா (19), மகன் பாலாஜி (14) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

ஜூலை 2 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உத்தமபாளையம் அருகே உள்ள கரோனா தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.

ஜூலை 8 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேசன், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடல், சொந்த ஊரான குள்ளப்பகவுண்டன் பட்டியில் காவலா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT