தேனி

போடியில் அனுமதியின்றி பேனா் வைத்தால் நடவடிக்கை

DIN

போடியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

போடி நகா் காவல்துறை சாா்பில் பிளக்ஸ் பேனா் வைப்பது தொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. காவல் ஆய்வாளா் ராமலட்சுமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படியே பிளக்ஸ் பேனா் வைக்கவேண்டும். நகராட்சி மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே பிளக்ஸ் பேனா் வைக்க வேண்டும். விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதில், அச்சக உரிமையாளா்கள், பிளக்ஸ் பேனா் அமைப்பாளா்கள், சாா்பு- ஆய்வாளா் அழகுராஜா மற்றும் போலீஸாா் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT