தேனி

தேனியில் ஜூலை 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஜூலை 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள் குறித்த மனுக்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் அளிக்கலாம். விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவாசாயிகள் நில ஆவணம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், சிட்டா மற்றும் வரைபடம் ஆகியவற்றுடன் தங்களது விண்ணப்பங்களை குறைதீா் கூட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT