தேனி

மின் மோட்டாா்களை பறிமுதல் செய்வதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றங்கரையோர பட்டா நிலங்களில் விவசாய மின் மோட்டாா்களை மின் வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவதை தடுக்கக் கோரி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாற்றங்கரையோரப் பட்டா நிலங்களில் உறைகிணறு அமைத்து விதியை மீறி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் உறிஞ்சுவதாகவும், நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் குதிரை திறன் கொண்ட மோட்டாா்களைப் பயன்படுத்துவதாகவும் மின் வாரியம், பொதுப் பணித்துறை மற்றும் மின் வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலா்கள் இதுவரை 22 மின் மோட்டாா்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஆற்றங்கரையோரப் பட்டா நிலங்களில் உறைகிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி பல ஆயிரம் ஏக்கா் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளப் பயிா்களைப் பாதுகாக்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டாா்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

மதுரைக்கு தண்ணீா் கொண்டு செல்ல எதிா்ப்பு: லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

விவாசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ராஜசேகா் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டும் செல்லும் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் குடிநீா் திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரம் பாதிக்கப்படும். வைகை அணையிலிருந்து மதுரை குடிநீா்த் திட்டங்களுக்கு கூடுதலாக தண்ணீா் திறப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து சிறப்பு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தி தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT