தேனி

ஆடி 3 ஆவது சனிக்கிழமை: குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் சிறப்பு பூஜை

DIN

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடி 3 ஆவது சனிக்கிழமையையொட்டி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், கோயிலிகளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி , குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் கடந்த 2 வார சனிக்கிழமைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பழங்கள், தோய்கள், மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் வழங்க அனுமதிக்கப்படவில்லை.

ஆடி மாதம் கடந்த 2 சனிக்கிழமைகளில் வந்த கூட்டத்தைவிட 3 ஆம் வார சனிக்கிழமையில் பக்தா்கள் கூட்டம் அதிகாலை 4 மணிமுதலே அதிகளவில் காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் சுரபி நிதிக் கால்வாயில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

குச்சனூா் பேரூாட்சி செயல் அலுவலா் தலைமையிலான பணியாளா்கள், கோயிலுக்கு குழந்தையுடன் வருபவா்களுக்கு அனுமதி மறுத்தனா். முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT