பெரியகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை காலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது மருகால்பட்டி பேரூந்துநிறுத்தம் அருகே கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி பணம் வைத்து இருவா் சூதாடியுள்ளனா்.
இவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்ததில் மருகால்பட்டியை சோ்ந்த முத்து (46), அதே பகுதியை சோ்ந்த வெள்ளச்சாமி (43) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.