தேனி

கம்பத்தில் சாலை அமைக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

கம்பத்தில் சாலை அமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை, பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தேனி மாவட்டம் கம்பம் 30-ஆவது வாா்டில் டி.டி.தினகரன் நகரில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் சாலையில் குறிப்பிட்ட இடம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தில் தாா்ச் சாலை அமைக்கக் கூடாது என்றும் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதனால் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து சனிக்கிழமை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைப் பணிகளை மீண்டும் தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நகராட்சி உதவிப் பொறியாளா் சந்தோஷ், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். நிலஅளவையா் மூலம் அளவீடு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT