தேனி

மருந்துக் கடைகளில் இலவச ஆக்சிஜன் பரிசோதனை: ஆட்சியா் உத்தரவு

DIN

மருந்துக் கடைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் மருந்து வாங்க வருவோருக்கு இலவசமாக ஆக்சிஜன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தனியாா் மருந்துக் கடைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் மருந்து வாங்க வருவோருக்கு பஸ்ஸ் ஆக்சி மீட்டா் கருவி மூலம் இலவசமாக ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் மாத்திரைகள் வாங்கிச் செல்வோா் குறித்த விபரங்களை பொது சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு தினமும் தெரிவிக்க வேண்டும். மருந்துக் கடைகளில் மருத்துவா்களின் பெயரை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT