முகப்பு
தேனி

தேனி மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட ஆட்சியராக க.வீ.முரளிதரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியராக க.வீ.முரளிதரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஹெச்.கிருஷ்ணன் உன்னி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட க.வீ.முரளிதரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழ்நாடு வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றிய இவா், தேனி மாவட்டத்தில் 17-ஆவது ஆட்சியராகப் பொற்றுப்பேற்றுள்ளாா். பின்னா் அவா் கூறுகையில், அரசு நலத் திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடைவதற்கும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய தீா்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.