முகப்பு
தேனி

கம்பத்தில் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

கம்பத்தில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை முன்பு கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

Updated On : 18 ஜூன், 2021 at 3:39 PM
கம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்.
பகிர்:

கம்பத்தில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை முன்பு கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் அரசு மருத்துவமனை முன்பு முல்லைப் பெரியாறு மருத்துவர்கள் சங்கம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், 2008இல் தமிழக அரசு நிறைவேற்றிய மருத்துவர் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு வரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் சையது சுல்தான் இப்ராஹிம், முருகன், தெய்வமணி உள்ளிட்ட 50க்கும் மேலான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.