ஒற்றைக் கையில் 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி கம்பம் மாணவர் சாதனை
ஒற்றைக் கையில் 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி கம்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
ஒற்றைக் கையில் 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி கம்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
உலக ஐக்கிய சிலம்ப விளையாட்டு கழகம் சார்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியும் மற்றும் சிலம்ப ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் ஒற்றைக் கம்பு ஒரு கையில் சுற்றுதல் மற்றும் சுருள் வாள் சுழற்றுதல் போட்டி நடைபெற்றது.
போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 180 ஆண், பெண் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
Advertisement
ஒற்றை கம்பு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் சுற்ற வேண்டும், சுருள்வாள் குறைந்தபட்சம் 5 நிமிடம் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை சுழற்ற வேண்டும். போட்டியில் தேனி மாவட்டம் சார்பில் கம்பம் உத்தமபுரம் சேர்ந்த முருகன் மகன் வி.பி.எம். பிரிதிவிராஜன் கலந்து கொண்ட ஒற்றை கம்பு சுற்றும் போட்டியில் வலது கையில் தொடர்ந்து 5 மணி நேரம் சுற்றினார்.
மேலும் ஒரு மணிநேரம் சுருள் வாள் சுழற்றியும் சாதனை படைத்தார்.
இவர் கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஆவார். பிரிதிவிராஜனுக்கு, உலக ஐக்கிய சிலம்ப அமைப்பு சார்பில் சிலம்ப போட்டியில் உலக சாதனை படைத்ததற்காக, தலைவர் எஸ்.சாந்தா, செயலாளர் எம்.வள்ளி ஆகியோர் மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
சாதனை படைத்த மாணவரை கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர் பாராட்டு தெரிவித்தனர்.
குந்தவை சிலம்ப கலைக்கூட பயிற்சியாளர்கள் புவனேஸ்வரி, ஹரிஹர நாதன் ஆகியோரும் மாணவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தனர்.