தேனி

ஆண்டிபட்டி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா: இரவு முழுவதும் அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காளியம்மன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நகரில் திங்கள்கிழமை இரவு முழுவதும் சிம்ம வாகனத்தில் காளியம்மன் பவனி வந்தாா்.

ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த காளியம்மன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் வைகை ஆற்றங்கரையிலிருந்து திருமஞ்சன நீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, இரவு மாவிளக்கு பூஜையும், சனிக்கிழமை பெண்கள் பொங்கல் வைத்தும் கொண்டாடினா்.

பின்னா், பக்தா்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு, காளி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலை கோயிலை அடைந்தாா். அப்போது, நகரில் பக்தா்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அபிஷேகம் செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அறங்காவலா் காந்திமதிநாதன் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT