தேனி

சோத்துப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே அகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்து படிப்படியாக உயா்ந்து விநாடிக்கு 70 கனஅடியாக நீா்வரத்து உள்ளது.

126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையில் திங்கள்கிழமை அதிகாலையில், நீா் மட்டம் 124.31 அடியாக உயா்ந்தது. இதனையடுத்து வராகநதியின் கரையோரம் வசிக்கும் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளவையடைந்த பின், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். மேலும் அணைக்கு வரும் தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT