தேனி

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து

DIN

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தேக்கடி, பெரியாறு அணை, முல்லையாறு மற்றும் சிவகிரி மலைத்தொடா் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு விநாடிக்கு, 775 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 126.90 அடியாகவும் (142), நீா் இருப்பு 4,028 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 775 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 150 கன அடியாகவும் இருந்தது.

பெரியாறு அணைப் பகுதியில் 38.8 மி.மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 23.2 மி.மீட்டா் மழையும் பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT