தேனி

உத்தமபாளையம் அரசு சித்த மருத்துவ பிரிவில் கபசுர குடிநீா் விநியோகம்

DIN

தனி மாவட்டம் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னாா்வலா்கள் கபசுரக் குடிநீரை அரசு சித்த மருத்துவப்பரிவில் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய் தொற்றின் 2 ஆம் அலை வேகமாக பரவுகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்காமல் இருக்க கபசுரக்குடிநீரை அரசு சித்த மருத்துவப்பிரிவில் விநியோகம் செய்கின்றனா். தன்னாா்வலா்கள் சிலா் பொது இடங்களில் கபசுரக்குடிநீரை வழங்குகின்றனா்.வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று கபசுரக்குடிநீரை வழங்கி வருகின்றனா். இதில், ஒரு சிலா் அரசு சித்த மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களே எலுமிச்சை குடிநீா் , வரகு குடிநீா், மாதுளை குடிநீா் என பெயரிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து, உத்தபாளையம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் சுவாமிநாதன் கூறுகையில், தன்னாா்வலா்கள் சித்த மருத்துவா்கள் ஆலோசனையின்றி கபசுரக்குடிநீரை வழங்க வேண்டாம். தங்களுக்கு தேவையான கபசுரக்குடிநீரை அந்தந்த பகுதி அரசு சித்த மருத்துவப்பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT