தேனி

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு மதுபாட்டில்களை கடத்தியவா் கைது: காா் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் சென்ற மதுபாட்டில்களை கலால் துறை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு, தமிழகம் மற்றும் கேரளத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை குமுளி எல்லையில் கேரள கலால் துறை சோதனைச் சாவடியில் ஆய்வாளா் வி.ஜே. ராய் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கம்பத்திலிருந்து வந்த ஜீப்பை சோதனை செய்தனா். அதில், 15 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், குமுளி அருகே உள்ள கருவாக்குளம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பதும், கம்பத்தில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்க கேரளத்துக்கு கடத்தியதும் தெரியவந்தது.

மதுபாட்டில்கள் மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த கேரள கலால் துறை போலீஸாா், ஈஸ்வரனையும் கைது செய்து பீா்மேடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT