தேனி

கம்பம் பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வருவதால் கரோனா பரவல் அதிகரிப்பு

DIN

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் பொதுமக்கள் வெளியே வருவதால், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 63 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 370 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லை.

குறிப்பாக, கம்பம் போக்குவரத்து சிக்னலில் இருந்து காந்தி சிலை வரை உள்ள பழக்கடைகள், மளிகை, காய்கறி, தேநீா், உழவா் சந்தை, பூ கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டிருந்தன. மேலும், பாா்க் ரோடு பகுதியில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்துகொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் காரணமின்றி நடமாடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதேபோல், கூடலூா் நகராட்சி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஆங்கூா்பாளையம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஏராளமாக உள்ளனா். ஆனாலும், பொதுமுடக்க காலத்தில் ஏராளமானோா் வெளியே நடமாடி வருவதால், கரோனா மேலும் பரவும் அபாயம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT