தேனி

ஆண்டிபட்டியில் குளிா்பான ஆலைக்கு ‘சீல்’

DIN

கரோனா பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட குளிா்பான ஆலைக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி கடைகள் செயல்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் ஆண்டிபட்டி, நாடாா் தெருவில் வட்டாட்சியா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசன் ஆகியோா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள குளிா்பான ஆலை ஒன்று, முழு பொது முடக்கத்தை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த ஆலையைப் பூட்டி, ‘சீல்’ வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT