கம்பம் அருகே ஆங்கூர்பாளையத்தில் ஒரேநாளில் 32 பேருக்கு கரோனா
கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் ஒரே நாளில் 32 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் ஒரே நாளில் 32 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஆங்கூர்பாளையம் ஊராட்சி இந்த ஊராட்சியில் இதுவரை யாரும் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி போடவில்லை. இதற்காக மே 29.ல் சுகாதார துறை சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல், காய்ச்சல் கண்டறிதல், சளி தடவல் பரிசோதனை என மூன்று நிகழ்வுகளுக்கான முகாம் நடைபெற்றது. இதில் 100 பேர்களுக்கு சளி தடவல் மாதிரி எடுத்துக்கொள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் திங்கள்கிழமை 100 பேர்களில் 32 பேர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் சுகாதாரத் துறையினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊராட்சி நிர்வாகத்தினர் தனியாக வாகனம் ஏற்பாடு செய்து தொற்று உறுதி செய்யப்பட்ட 32 பேர்களையும் கரோனா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மருத்துவ துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியது, கரோனா தொற்று சளி தடவல் மாதிரி பரிசோதனைகள் எடுக்க பொதுமக்கள் சுகாதாரத் துறையினருடன் ஒத்துழைப்பதில்லை. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கண்டறிதல் பெரிதும் சிரமம் ஆகிறது. மே 29.ல் 100 பேர்களுக்கு மாதிரி எடுத்ததில் 32 பேர்களுக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது.
இனி இங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெறும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர் சிகிச்சை பெற்றால் ஊராட்சி பகுதியில் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.