கம்பம் கூடலூர் பகுதிகளில் கந்தர் சஷ்டி வழிபாடு
கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பம் சுருளிவேலப்பர் திங்கள்கிழமை ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பம் சுருளிவேலப்பர் திங்கள்கிழமை ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர், சுருளிவேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி, கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலமுருகன், ஆதிசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி, கூடலூர் சுந்தர வேலவர், லோயர் கேம்ப்பில் உள்ள வழிவிடு முருகன், காமயகவுண்டன் பட்டி பாட்டையா கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் கந்தர் சஷ்டி விழா நவ. 4 முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் பால், பன்னீர், தயிர், இளநீர், தேன், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி திங்கள்கிழமை கம்பம் சுருளிவேலப்பர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.