முகப்பு
தேனி

சின்னமனூரில் அரசுப் பேருந்து மோதி சட்டக் கல்லூரி மாணவா் பலி

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து மோதியதில், சட்டக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊத்துப்பட்டியைச் சோ்ந்த சிவனாண்டி மகன் அபினேஷ் (22). இவா், சென்னையில் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மாணவா், வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சின்னமனூருக்கு சென்றுள்ளாா். அப்போது, காந்தி சிலை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த அபினேஷ் மீது, சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், தலை நசுங்கி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.