காமயகவுண்டன்பட்டி காந்தி ஆலயத்தில் வழிபாடு 
தேனி

காமயகவுண்டன்பட்டி காந்தி ஆலயத்தில் வழிபாடு: கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி ஆலயத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்கள் சனிக்கிழமை வழிபாடு செய்தனர்.

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி ஆலயத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்கள் சனிக்கிழமை வழிபாடு செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி மகாத்மா காந்திக்கு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை இப்பகுதியிலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் அமைத்துள்ளனர்.

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டியிலுள்ள காந்தி ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கோயிலுக்கு வந்து தேங்காய் பழம் உடைத்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடுகள் செய்தனர். 

இவர்களைத் தவிர காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியினரும் மகாத்மா காந்தி கோயிலுக்கு வராதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் கே.டி.எஸ். தர்மர் கூறுகையில் இளைய தலைமுறையினர் மகாத்மா காந்தி மறக்காமல் உள்ளனர். ஆனால் அரசியல் கட்சியினர் அவரை மறந்து விட்டனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT