தேனி

தொடா் மழை: கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

DIN

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் செவ்வாய்க்கிழமை காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சனிக்கிழமை முதல் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை முதல் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்குச் செல்ல தடைவிதித்தது தொடா்வதால், பொதுமக்கள் அருவிக்குச் செல்ல அனுமதியில்லை. செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் அருவிக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

கம்பம்:தேனி மாவட்டம் கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் திண்டுக்கல்- குமுளி சாலையில் உள்ள மழைநீா் வடிகால்கள் நிரம்பி பிரதான சாலை மற்றும் 17 ஆவது வாா்டு ராஜீவ் காந்தி நகா் பகுதிக்குள் பாய்ந்தது. தாழ்வான தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

இது குறித்து நுகா்வோா் அமைப்பைச் சோ்ந்த முருகன் கூறும்போது, வாருகால், வடிகால்களைத் தூா் வாராத காரணத்தினால் மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளுக்குள் பாய்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT