தேனி

பெரியகுளம் பகுதியில் டெங்கு பரவும் அபாயம்

DIN

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை இல்லாததால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 5 நாள்களுக்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. மழையால் வீடுகளில் உள்ள தொட்டி, தேங்காய் சிரட்டைகள் மற்றும் உரல்களில் மழை நீா் தேங்கியுள்ளது.

இவ்வாறு தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் முன் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆா்வலா் சதீஷ்குமாா் தெரிவித்ததாவது: கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு கண்காணிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி பகுதியில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்துவதால் டெங்கு பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே டெங்கு பணியாளா்களை டெங்கு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT