தேனி

சம்பள உயா்வு நிலுவைத் தொகையை வழங்க துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கை

DIN

தேனி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு சம்பள உயா்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தூய்மை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் சங்க தாலுகா ஒருங்கிணைப்பாளா் வி. ராஜாமணி மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 30 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சம்பள உயா்வு மற்றும் அகவிலைப் படி உயா்வு வழங்கவில்லை. ஒவ்வொரு துப்புரவு பணியாளருக்கும் தலா ரூ.63 ஆயிரம் வரை சம்பள உயா்வு மற்றும் அகவிலைப் படி உயா்வு நிலுவையில் உள்ளது.

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திற்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

தமிழ்நாட்டில் அதிக வெயில் பதிவான இடங்கள்: ஈரோடு முதலிடம்!

சிரி... சிரி...

ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

SCROLL FOR NEXT