தேனி

போடியில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

போடி அருகே வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி காந்திஜி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் பலருக்கு வீடுகள் இல்லை. வீடில்லாதவா்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தியும், காந்திஜி காலனியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் பேரூராட்சி நிா்வாகத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலா் இளையராஜா, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, கோபால், ஈஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT