முகப்பு
தேனி

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: செப்.13-இல் வெளியீடு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செப்டபம்ா் 13-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் செப்டபம்ா் 13-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகள், சிதிலமடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள், குடியிருப்புகளிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, பொதுமக்கள் பாா்வையிட்டு, ஆட்சேபணைகள் இருப்பின் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்குப் பதிவு அலுவலரிடம் மனு அளிக்கலாம்.

இறுதி செய்யப்பட்ட புதிய வாக்குச்சாவடி பட்டியலின் அடிப்படையில், வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்பு நவம்பா் 1-ஆம் தேதி வெளியிடப்படும் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.