தேனி

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,508 வழக்குகளுக்கு தீா்வு

DIN

தேனி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சனிக்கிழமை, மொத்தம் 1,508 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஏ.முகமது ஜியாவுதீன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.சுந்தரம், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.சித்ரா, நீதித்துறை நடுவா் என்.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடி சாா்பு நீதிமன்றம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி வாரக் கடன் வழக்குகள் என மொத்தம் 1,508 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT