முகப்பு
தேனி

வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு

சின்னமனூா் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு வீட்டில் 12 பவுன் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

சின்னமனூா் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு வீட்டில் 12 பவுன் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி ரெஜினா. வியாழக்கிழமை இரவு, ஊா்த் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பாா்க்க வீட்டைப் பூட்டி விட்டு, சாவியை அதே வீட்டில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளாா்.

பின் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய ரெஜினா வந்து பாா்த்த போது வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.