தேனி

கம்பத்தில் அம்பேத்கா் பிறந்த நாள்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக நகரத் தலைவா் பி.ஈஸ்வரன், செயலாளா் பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் காந்தி சிலை அருகே அம்பேத்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் 50 ஆண், பெண் முதியோா்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினா்.

நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளா் மோகன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில் ஆங்கூா்பாளையம் சாலை சந்திப்பில் அம்பேத்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆதித்தமிழா் பேரவை சாா்பில் நகரச் செயலாளா் அதியா் மணி தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் புலிகள் அமைப்பு சாா்பில் ஐசக் போதகா் திடலில் கோட்டை முருகன் தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT