பைக்குகள் மோதல்: ஒருவா் பலி
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா்.
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (42). இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
எ.புதுப்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது எதிரே சேகா் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.