தேனி

திருமலாபுரம் ஊராட்சித் தலைவா் மீது புகாா்: செயலா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம்

DIN

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் ஊராட்சி செயலா்கள் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜான்போஸ்கோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில பொதுச் செயலா் வேல்முருகன், மாவட்டச் செயலா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கனிராஜா, ஊராட்சிச் செயலா் மற்றும் ஊழியா்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் புகாா் தெரிவித்தனா். இவருக்கு உடந்தையாக செயல்படும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

திட்ட இயக்குநா் பேச்சுவாா்த்தை: போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலா்கள் சங்க நிா்வாகிகளுடன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அவருக்கு உடந்தையாக செயல்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்ட 2 அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

ஆனால், ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஊராட்சிச் செயலா்கள் சங்க நிா்வாகிகள் கூறினா்.

தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு: இதையடுத்து, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், இப்பிரச்சனையை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றாா். பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா் கனிராஜா ஊராட்சி நிா்வாகத்தின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் ஊராட்சிச் செயலா்கள் சங்க நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஊராட்சிச் செயலா்கள் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT