முகப்பு
தேனி

சேலம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு

சேலம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள், பெரியகுளத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை புதன்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சேலம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள், பெரியகுளத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை புதன்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனா்.

அதிமுகவில் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டு, இருவரும் பிரிந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரும்பான்மையான நிா்வாகிகள் ஆதரவளித்துள்ளனா்.

இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட ஒன்றியக் கவுன்சிலா் பழனிச்சாமி, சேலம் ரவி உள்ளிட்ட நிா்வாகிகள், பெரியகுளத்திலுள்ள ஓ. பன்னீா்செல்வம் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

பின்னா், சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

சேலம் மாநகரில் அதிமுக உருவாகிய காலத்திலிருந்து உள்ள உறுப்பினா்களுக்கு தற்போது மரியாதை இல்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ. பன்னீா்செல்வத்தை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளோம். சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் அனைவரையும் அழைத்த வந்து, விரைவில் ஓ.பன்னீா்செல்வத்தை சந்திக்க உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.