கோப்புப்படம் 
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தால் இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் அதிகரிப்பு 

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு செவ்வாய்க்கிழமை 10,451 கன அடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. 

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு செவ்வாய்க்கிழமை 10,451 கன அடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. 

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,139.55 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 7,012 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு, 10,451 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு, திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,144 கன அடியாகவும் இருந்தது.

இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றுவதற்காக, (மொத்தம் உள்ள 13 மதகுகளில்) வெர்டிகிள் அமைப்பு உள்ள 10 மதகுகள், 90 செ.மீ.உயரமும்,  ரேடியஸ் அமைப்புள்ள 3 மதகுகள், 60 செ.மீ., உயரமும் உயர்த்தப்பட்டு அதன் வழியாக, விநாடிக்கு 9,237 கனஅடியாக வெளியேற்றப்பட்டு இடுக்கி அணைக்கு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT