முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் சமையல் எரிவாயு உருளை ரூ.1,150-க்கு விற்பனை: பொதுமக்கள் கவலை

உத்தமபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை ரூ.1,150-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

உத்தமபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை ரூ.1,150-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதன் விலை ரூ.350 முதல் ரூ.400 வரையில் விற்கப்பட்டது. அதன்பின், படிப்படியாக உயா்ந்து ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனையானது. இந்நிலையில், இதற்கு ரூ.150 முதல் ரூ. 200 வரை வழங்கப்பட்டு வந்த மானியமும் நிறுத்தப்பட்டது. ஆனால், இதன் விலை மட்டும் தொடா்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலை ரூ.1,110 என உயா்ந்துள்ளது. மேலும் அதை கொண்டு வரும் ஊழியருக்கு ரூ.40 சோ்த்து மொத்தம் ரூ.1,150-க்கு சமையல் எரிவாயு உருளையை வாங்க வேண்டி உள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளா்கள், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வரும் காலங்களில் சமையல் எரிவாயு உருளை வாங்க முடியுமா என்ற கவலையில் அவா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.