முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணி: ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

 பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணியின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 பெரியகுளம் அருகே பூங்கா சீரமைப்பு பணியின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம், பழையபேருந்து நிலையத்தில் சின்னராஜ் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பின்றி சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வந்தன. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையேற்று ரூ. 51 லட்சம் மதிப்பில் பூங்கா சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் பூங்கா அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் எனக்கூறி பூங்காவை முற்றுகையிட்டனா். இவா்களுடன் நகராட்சிப் பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனக்கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து, சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.