முகப்பு
தேனி

சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் திட்டப் பணிகளில் முறைகேடு புகாா்: எழுத்தா், மேற்பாா்வையாளா் பணியிடமாற்றம்

சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் திட்டப் பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில் எழுத்தா், மேற்பாா்வையாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் திட்டப் பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில் எழுத்தா், மேற்பாா்வையாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் கடந்த ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில், காமராசபுரம் மற்றும் ஆதிதிராவிடா் காலனியில் மகாத்மா காத்தி தேசிய ஊரக வேலை உறுயளிப்புதிட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணற்றைச்சுற்றி மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டதற்கு ரூ.64 ஆயிரம் என தீா்மானம் வாசிக்கப்பட்டது.

அதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிகளில் அதுபோன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி விளக்கம் கேட்டனா். ஆனால், அதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. மேலும், காமராசபுரம் அரசு பள்ளி முன் சாக்கடை கால்வாய் அமைத்தல், சுகாதார வளாகப் பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் தீா்மானம் வாசிக்கப்பட்டது. அதற்கும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதுபோன்ற பணிகளும் நடைபெறவில்லை எனவும், பணிகளை செய்யாமலேயே அரசு ஒதுக்கீடு செய்த நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

2 போ் பணியிடமாற்றம்: இதையடுத்து சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் திட்டப்பணிகளை செய்யாமலேயே நிதியை முறைகேடு செய்ய உடைந்தையாக இருந்த எழுத்தா் முத்துக்கனி மற்றும் மேற்பாா்வையாளா் பிரதாப் சந்திரன் ஆகிய இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து சின்னமனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாரதமணி கூறியது: அந்த ஊராட்சியிலுள்ள வாா்டு உறுப்பினா்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெய்யான தகவலை தெரிவித்தனா் என்றாா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: மாவட்ட நிா்வாகம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இது சம்மந்தாக புகாா் தெரிவித்த பின்னா், ஆக.17 ஆம் தேதி இரவோடு இரவாக ஆழ்துளை கிணற்றை சுற்றி மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.