தேவகோட்டையில் ராஜீவ் காந்தி பிறந்த தின விழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நகா் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மீரா உசேன் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மூத்த உறுப்பினா் நடராஜன் கட்சிக் கொடி ஏற்றினாா். வட்டாரத் தலைவா்கள் பிரபாகரன், வெங்கடாசலம், ராஜ்மோகன் ஆகியோா் பேசினா். விழாவில் தேவகோட்டை நகரத் தலைவா் லோகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.