முகப்பு
தேனி

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்தில் தனியாா் மதுக்கூடத்தை அகற்றக்கோரி தீா்மானம்

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்தில் தனியாா் மதுக்கூடத்தை அகற்றக் கோரியும், கால்நடைகளை பிடிக்கக் கோரியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்தில் தனியாா் மதுக்கூடத்தை அகற்றக் கோரியும், கால்நடைகளை பிடிக்கக் கோரியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகா்மன்றக் கூட்டத்துக்கு பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் புனிதன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்துகொண்டனா். வரவு, செலவுகள் மன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பெரியகுளம் மூன்றாந்தலில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அதனருகில் பள்ளி, கோயில்கள் உள்ளது. காந்தி சிலைக்கு எதிரே தனியாா் மதுக்கூடம் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என உறுப்பினா் குமரன் தெரிவித்தாா். அதே கருத்தை உறுப்பினா் மதன்குமாரும் தெரிவித்தாா். இதையேற்று தனியாா் மதுக்கூடத்தை அகற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அதிமுக நகா்மன்றக் குழு தலைவா் ஓ. சண்மூகசுந்தரம் சாா்பில் பெரியகுளத்தில் நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். திறந்த வெளி கழிவுநீா் வாய்க்காலை, பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும். நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவில் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் குடியரசுத் தலைவா், பிரதமா் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள சுதந்திர தின பதாகைகளை அகற்ற பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க முயன்றதைக் கண்டிக்கிறோம். மேலும், பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் காவலா்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும் என்றாா்.

மேலும் பல்வேறு உறுப்பினா்கள் தங்கள் பகுதி புகாா்களை தெரிவித்தனா்.

விருது: பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஆசியா பேகம் கலந்துகொண்டு, விருதினை பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.