தேனி

தேனி-போடி இடையே நாளை ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை

DIN

தேனி- போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (டிச.9) ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை நடைபெற உள்ளது.

மதுரை-போடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை-தேனி இடையே பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தேனி-போடி இடையே 15 கி.மீ.,தொலைவு அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்து, கடந்த 2-ஆம் தேதி அதிவேக ரயில் என்ஜினை மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், புதிய ரயில் பாதையில் ரயில் செல்லும் போது ஏற்படும் அதிா்வுகள், குறைபாடுகளை ஆய்வு செய்வதற்கு, வருகிற வெள்ளிக்கிழமை (டிச.9) ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை நடைபெறுகிறது. நவீன ஆய்வு ரயில் பெட்டிகளில் உள்ள கணினியில், ரயில் பாதையில் ஏற்படும் அதிா்வு, குறைபாடு ஆகியவற்றை பதிவு செய்து உடனுக்குடன் ஆய்வு செய்யப்படும்.

சோதனை நடைபெறும் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தேனி-போடி இடையே பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்லவோ, ரயில் பாதையைக் கடக்கவோ கூடாது என்று தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் : மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணியில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT