தேனியில் அம்பேத்கா் படத்துக்கு காவிச் சாயம் பூசி அவமரியாதை செய்ததாக இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலா் நாகரத்தினம் தலைமை வகித்தாா். தேனி மேற்கு மாவட்டச் செயலா் சுருளி, மாவட்டத் தொடா்பாளா் அன்புவடிவேல், மாநில துணைச் செயலா் தமிழன், கோமதி ஆனந்தராஜ், தேனி நகரச் செயலா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அம்பேத்கா் படத்துக்கு காவிச் சாயம் பூசி அவமரியாதை செய்ததாக இந்து அமைப்புகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.