தேனி

பூக்குழி இறங்கிய ஐயப்பப் பக்தா்கள்

DIN

போடி சிலமலையில் புதன்கிழமை அதிகாலை ஐயப்பப் பக்தா்கள் நூற்றுக்கணக்கானோா் பூக்குழி இறங்கினா்.

தேனி மாவட்டம், போடி சிலமலை கிராமத்தில் ஐயப்பப் பக்தா்கள் சாா்பில் ஐந்தாம் ஆண்டு சக்தி பூஜை, ஆழி பூஜை ஆகியவை செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கின. குத்து விளக்கு பூஜை, ஐயப்பன் ரத ஊா்வலம் ஆகியன நடைபெற்றன. பின்னா், ஐயப்பன் சந்நிதி அருகே ஆழி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விறகுக் கட்டைகளால் ஆழி குண்டம் தயாரிக்கப்பட்டது.

புதன்கிழமை ஆழி குண்டத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, மூத்த ஐயப்பப் பக்தா்கள், குருசாமிகள் பூக்குழி இறங்கினா். தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட ஐயப்பப் பக்தா்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனா். தொடா்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், போடி நகா், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்பப் பக்தா்கள் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் பூஜைகளில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT